உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு தானம் அளித்தால் புண்ணியமே கிடையாதாமே!

கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு தானம் அளித்தால் புண்ணியமே கிடையாதாமே!

தானம் செய்வதால் புண்ணியம் போய் விடும் என்று கூறும் அந்த புத்திமான் யாரோ? கோயிலில் செய்தால் என்ன? வீட்டில் செய்தால் என்ன? குறிக்கோள் ஏழையை மகிழ்விப்பது தானே? அதனால் புண்ணியம் கூடுமே தவிர நம்மைவிட்டுச் சென்று விடாது. ஆனால், கோயில் வாசலில் பிச்சை எடுப்பது தவறு. அதை ஊக்குவிப்பது கூடாது. ஏழைகள் வேறு, பிச்சை எடுப்பவர்கள் வேறு. உழைக்கத் தகுதியிருந்தும் இவர்கள் பிச்சை எடுப்பதை நாமே வளர்ப்பது போல் அல்லவா ஆகிறது! நன்றாக சிந்திக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !