முக்தீஸ்வரரை வழிபட்ட சூரிய பகவான் : பக்தர்கள் பரவசம்
ADDED :1124 days ago
மதுரை : மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை சூரிய கதிர்கள் கருவறைக்குள் ஊடுருவி மூலவரை தரிசிப்பது வழக்கம், நேற்று துவங்கிய இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். செப்.,30 வரை காலை 6.15 மணிமுதல் 6.45 வரை இதை நேரில் தரிசிக்கலாம்.