உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலையில் சயனகோலத்தில் அருள்பாலிக்ககும் மூலவருக்கு மஞ்சள்பட்டுத்தி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி சனியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 1008 நாம அர்ச்சனை நடந்தது.

திருப்புத்துார் அருகே கொங்கரத்தி வண் புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்ஸவ பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.  திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்ஸவர் ஸ்ரீதேவி,பூதேவியுடன் அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !