உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி கேரள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி கேரள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில், பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனி நேற்று மதியம் தமிழக எல்லை களியக்காவிளையில் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னர் காலம் முதல் நடந்து வரும் நவராத்திரி பவனி நேற்று முன்தினம் பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் இந்த பவனி தமிழக எல்லலையான களியக்காவிளை வந்த போது அங்கு கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் பழத்தட்டு கொடுத்து பவனியை வரவேற்றார். தொடர்ந்து கேரள போலீஸ் பாதுகாப்புடன் பவனி புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றது. இன்று காலை இங்கிருந்து புறப்பட்டு மாலையில் திருவனந்தபுரம் சென்றடையும். இங்கு மன்னர் குடும்பத்தினர் பவனியை வரவேற்று அழைத்து செல்வர். நாளை கொலு மண்டபத்தில் நவராத்திரி பூஜை தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !