அக்கா காளி! தங்கை மாரி!
ADDED :4819 days ago
காளியும் மாரியும் வேறு வேறு தெய்வங்கள் அல்ல. இருவரும் ஒருவரே. பழங்காலத்தில் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். உழவு செழிக்க மழைநீர் அவசியம். அதனால், மழை வேண்டி இயற்கையையே பெண்ணாக்கி வழிபட்டனர். பொங்கலிட்டு பூஜித்தனர். மழை வளம் பெருகி விவசாயம் செழித்தது. மழைக்கான அறிகுறி வானில் தென்படுவதை (கரிய மேகம் கூடிநிற்கும் நிலை) காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் விழுவதை (முத்துமாரி) என்றும் அவர்கள் கூறினர். இந்த இயற்கை சக்தியை இருவித பெண் தெய்வமாக வழிபட்டனர். முதலில் வரும் மேகத்தை அக்கா காளி, பின்னர் வரும் மழையை தங்கை மாரி என்று அழைத்தனர்.