பரமக்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வார விழா
ADDED :1117 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி வார விழாவை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்சவர் சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக அருள்பாலித்தார். மூலவர் பரமஸ்வாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரமக்குடி கோதண்டராம சுவாமி கோயிலில் புனித புளி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர். எமனேஸ்வரம் அனுமார் கோயிலில் மூலவர் வெண்ணை சாற்றியும், உற்சவர் அமர்ந்த திருக்கோலத்திலும் அருள் பாலித்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்திலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் அருள் பாலித்தனர்.