ரேணுகாவின் தவம்
ADDED :4816 days ago
ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். அவரது மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். விதி விளையாடியது. பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. ரேணுகாவின் உடல் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயினால் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்த அவள், வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சளைப் பூசிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழ் பருகினாள். சிவ பார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். பார்வதி ரேணுகாவின் முன்தோன்றி, தன் அம்சத்தை வழங்கி அருள்புரிந்தாள். அன்று முதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள்.