திருவேடகம் வைகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் : குவிந்த மக்கள்
ADDED :1206 days ago
சோழவந்தான்: திருவேடகம் வைகை ஆற்று படித்துறையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இங்கு அதிகாலை முதலே வைகை ஆற்றில் திதி கொடுக்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வைகையில் புனித நீராடி ஏடகநாதர் சுவாமி உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு செய்தனர். கிராம தலைமை புரோகிதர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்ட பக்தர்கள் கார்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சோழவந்தான் போலீசார் வாகனங்கள் நகர்ந்து செல்ல வழிவகை செய்தனர்.