களைகட்டிய நவராத்திரி விழா: கோயில்கள், வீடுகளில் கொலு பூஜை
ADDED :1129 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் கலைமகள் விழா மற்றும் கொலு பூஜை துவங்கியது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சவுந்தரவல்லி தாயார், ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி, முத்தாலம்மன், வீரமாகாளி அம்மன், துர்க்கை அம்மன், சந்தன மாரியம்மன், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயிலில் சவுந்தர்ய நாயகி அம்பாள் என அனைத்து கோயில்களிடம் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கோயில்கள் உட்பட வீடுகள் தோறும் கொலு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பரமக்குடி வ.உ.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5 படிகளுடன் கூடிய கொலு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.