108 திருவிளக்கு பூஜை
                              ADDED :1129 days ago 
                            
                          
                           ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே பச்சனத்திக்கோட்டை மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.