மகாளய அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜை
ADDED :1190 days ago
சூலூர்: மகாளய அமாவாசையை ஒட்டி காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை ஒட்டி காங்கயம் பாளையம் சென்னியாண்டவருக்கு சிறப்பு திரவிய அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பஞ்சாமிர்தம், பால், தேன், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவிய அபிஷேகம் முடிந்து, அலங்கார பூஜை நடந்தது. கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.