திருவண்ணாமலை கோயிலில் காயத்திரி ஜெபம் அலங்காரத்தில் பச்சையம்மன்
ADDED :1441 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவில் நவராத்திரி விழா மூன்றாம் நாளில் காயத்திரி ஜெபம் அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.