பிரத்தியங்கிரா தேவியாக காட்சியளித்த திருவொற்றியூர் திருவுடைநாயகி
திருவொற்றியூர் :நவராத்திரி திருவிழா மூன்றாம் நாளில், பிரத்தியங்கிரா தேவியாக காட்சியளித்த திருவுடைநாயகியை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.மணலி, திருவுடைநாதர் - திருவுடைநாயகி கோவிலில் நவராத்திரி விழா, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இவ்வாண்டு 26ம் தேதி, நவராத்திரி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது.
அதன்படி மூலவர் தாயார், தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு மூன்றாம் நாளில், திருவுடைநாயகி தாயார், பிரத்தியங்கிரா தேவி அலங்காரத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.அதே போல், 2,000 ஆண்டுகள் பழமையான, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளில், நந்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய வடிவுடையம்மன் உற்சவ தாயார், நான்கு மாடவீதியில் உலா வந்தார்.