சிறுவாபுரி கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 52 லட்சம்
ADDED :1120 days ago
ஊத்துக்கோட்டை: ஆரணி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக, கோவில் வளாகத்தில், 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் சித்ராதேவி, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 51 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய், 68 கிராம் தங்கம், மூன்று கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்தன. இது, ஒன்றரை மாதங்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.