உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளழகர் கோயிலில் தீ விபத்து; புத்தகங்கள், ரசீதுகள் கருகின

கள்ளழகர் கோயிலில் தீ விபத்து; புத்தகங்கள், ரசீதுகள் கருகின

மதுரை : மதுரை கள்ளழகர் கோயில் வளாக பொருட்கள் பாதுகாப்பு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரசீதுகள், போட்டோ, புத்தகங்கள் கருகின.அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் உள்ளது. கோயில் வளாக தெற்காடி வீதி அர்ச்சகர் குடியிருப்பு அருகே பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கு கோயில் வரவு-செலவு ரசீதுகள், போட்டோக்கள், கோயில் வரலாறு தொடர்பான ஆன்மிக புத்தகங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று இரவு 7:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. மேலுார் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. புத்தகங்கள், ரசீதுகள், போட்டோக்கள் கருகின.அமைச்சர் மூர்த்தி, கோயில் உதவி கமிஷனர் ராமசாமி பார்வையிட்டனர். மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !