உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செகுட்டு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

செகுட்டு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: பூதமங்கலம், மம்மாணிபட்டியில் உள்ள செகுட்டு அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.  மணியம்பட்டியில் இருந்து கிராமத்தார்கள் புரவிகளை 2 கி.மீ., துாரம் சுமந்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் பூதமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !