ஆயுத பூஜை கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
ADDED :1109 days ago
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை செய்யப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று தொழில் நிறுவனங்களில் அங்குள்ள கருவிகளுக்கும், வீடுகளில் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களைத் தெய்வமாகப் போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . சரஸ்வதி பூஜையன்று மாலையில் தொழில் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். மறுநாள் விஜயதசமியன்று அவற்றை எடுத்து தொழிலைத் துவங்கினால், ஆண்டு முழுவதும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஜடப்பொருட்களிலும் தெய்வத்தைக் காண்பதே ஆயுதபூஜையின் நோக்கம். குழந்தைகள் படிப்பைத் துவங்கவும் இந்தநாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.