உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமி: தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் 3 இடங்களில் இன்று நடக்கிறது

விஜயதசமி: தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் 3 இடங்களில் இன்று நடக்கிறது

சென்னை : விஜயதசமியை முன்னிட்டு, தினமலர் நாளிதழ் சார்பில், குழந்தைகளின் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் மூன்று இடங்களில் இன்று நடக்கிறது.

தினமலர் நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி ஆண்டவர் கோவில், பெரம்பூர் எவர்வின் பள்ளி, தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று காலை நடக்கிறது. நிகழ்வில், கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் பங்கேற்று, குழந்தைகளின் விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !