கோவை சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1182 days ago
கோவை : சரஸ்வதி பூஜையான நேற்று தமிழ்நாட்டின் இரண்டாவது கேந்திரமான கோவை மாதா ஸ்ரீசரஸ்வதி அம்மன் கோவிலில் தாயார் வெண்ணிற பட்டுபுடவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் நடைபெறும். என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் கோவை வைசியாள் வீதியிலுள்ள வசாவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சரஸ்வதி அலங்காரத்தில் கன்னிகாபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.