உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விழா

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விழா

மேட்டுப்பாளையம்: ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வீணை மற்றும் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி கொலு உற்சவம் விழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் செய்து வந்தனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று வீணையை கையில் ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி சிலையின் பின்புறம், ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !