உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயிலில் வித்யாரம்பம் கோலாகலம்

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயிலில் வித்யாரம்பம் கோலாகலம்

மதுரை: மதுரை, இன்மையில் நன்மை தருவார் கோயிலில் வித்யாரம்பம் நடந்தது.

மதுரையில் தினமலர் சார்பில் இன்மையில் நன்மை தருவார் கோயிலில் விஜய தசமி திருநாளை முன்னிட்டு, வித்யாரம்பம் நடந்தது. வித்யாரம்பத்தில் குழந்தைகளுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும். மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தான அ..,ஆ.. ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தும், நாவில் தேன் வைத்து எழுத்துகளை உச்சரிக்க செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர். விழா நிகழ்ச்சிகளை தினமலர், கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !