நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி
ADDED :2 hours ago
பேரையூர்; டி.கல்லுப்பட்டி நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா இன்று நடந்தது. யாகங்கள், கோமாதா பூஜை, பால்,இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து ராஜ கம்பீர மாருதி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவாற்றினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நல்லமரம், கொட்டாணிபட்டி கிராம மக்கள் செய்தனர்.