செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம்
ADDED :2 hours ago
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பில் ராஜ அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.