ஆயி மகமாயி
ADDED :1163 days ago
அம்பிகையை, ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் என்று போற்றுவர். உயிர்களுக்கு எல்லாம் தாயாக இருப்பதால் ஆயி என்று அவளுக்குப் பெயர். பிரபஞ்சம் எங்கும் அவளுக்கு கண்கள் இருக்கின்றன. இதனால், கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள் என்றெல்லாம் அழைப்பர். மகாகவி பாரதியார், எங்கெங்கு காணினும் சக்தியடா என இவளை போற்றுகிறார். மாயவனான கண்ணனின் தங்கை என்பதாலும் மாயி மகமாயி என அவளுக்கு பெயருண்டு.