தேவதைகள் தந்த ஆயிரம்
ADDED :1109 days ago
ஒருமுறை சிவபெருமானின் விருப்பத்திற்கேற்ப பார்வதி சாந்த கோலத்தில் காட்சி கொடுத்தாள். அப்போது அவளது வாயில் இருந்து வசினீ என்னும் எட்டு வாக்கு தேவதைகள் தோன்றினர். அவர்கள் போற்றித் துதித்த ஆயிரம் திருநாமங்களே லலிதா சகஸ்ர நாமம். இதனை உலக நன்மைக்காக திருமாலின் அவதாரமான ஹயக்ரீவ மூர்த்தி அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்தார். அகத்தியர் மூலம் இந்த மந்திரம் பூலோகத்தில் பரவியது. பிரம்மாண்ட புராணம் லலிதோபாக்கியானம் என்னும் பகுதியில் லலிதா சகஸ்ரநாமம் என்னும் பெயரில் இந்த ஆயிரம் பெயர்களும் உள்ளன.