உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வெள்ளி பூஜை பொருட்கள் காணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வெள்ளி பூஜை பொருட்கள் காணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு விஜயவாடாவை சேர்ந்த வெங்கட் - பத்மா குடும்பத்தினர் 7 கிலோ 800 கிராம் எடையுள்ள வெள்ளி பூஜை பொருட்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞான பிரசுனாம்பிக்கை தாயாருக்கும் காணிக்கையாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு இடம் வழங்கினர் .இவர்களுக்கு முன்னதாக கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் சாமி தரிசனம் செய்ததை அடுத்து கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !