திருமண தடை நீங்க சிறப்பு ஹோமம்
ADDED :1064 days ago
சிவகாசி: சிவகாசியில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் திருமண வயது அடைந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெற ஸ்ரீ மஹா சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் அண்ணாமலை விஜயா, சீனிவாசன் சுப்புத்தாய், தர்மராஜ் பார்வதி தம்பதிகள் துவக்கி வைத்தனர். பங்கேற்ற இளைஞர்கள் இளம்பெண்கள் தங்களது ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். விவாக டெய்லி சிட் கலெக்சன், விவாகா மேட்ரிமோனி என்ற செயலிகள் துவங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சிவகாசி கிளை மேலாளர்கள் பால்பாண்டி, சரவணகுமார், ராமச்சந்திரன் செய்தனர்.