உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திட்டக்குடி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திட்டக்குடி: திட்டக்குடி வதிஷ்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மஞ்சள், சந்தனம், பால், இளநீர் அபிஷேகங்கள்   செய்யப்பட்டது. பூஜையில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைணவ செம்மல் வரத சிங்காச்சாரியார் தலைமையில் கோவில் பட்டாச்சாரியார் ராகவன்   பூஜையை நடத்தி வைத்தார். திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !