திருப்பரங்குன்றம் கோயிலில் ஸ்கந்த ஹோமம்
ADDED :1152 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உபயோதாரர் மூலம் ஸ்கந்த ஹோமம் நேற்று நடத்தப்பட்டது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு யாக பூஜை முடிந்து, உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.