கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் உலக அமைதிக்காக மகா சண்டி யாகம்
ADDED :1152 days ago
கமுதி: கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் உலக அமைதிக்காக மகா சண்டியாகம் பூஜை நடந்தது. கோயில் முன்பு அமைக்கப்பட்ட மகா யாகசாலையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு கொண்டுவரப்பட்ட புனித நீரை வைத்து விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.பின்பு வேதமந்திரங்கள் முழங்க மகா சண்டியாக பூஜை நடந்தது. தாலி, வெள்ளி கொலுசு, 237 வகையான மூலிகைகள், பழம்வகைகள், பூ உட்பட அனைத்து வகையான தானியங்கள் வைத்து யாகபூஜை செய்யப்பட்டது. மூலவரான முத்துமாரியம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மகா சண்டியாகத்திற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.