உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈசுபுளி வலசை இருளப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

ஈசுபுளி வலசை இருளப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே குதக்கோட்டை ஊராட்சி ஈசுபுளி வலசையில் நேற்று இருளப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடிற்கு பின் விநாயகர், இருளப்பசாமி, கருப்பண்ணசாமி, ராக்காச்சி அம்மன், பத்திரகாளி அம்மன், நொண்டி கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராமநாதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !