உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரி

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக நேற்று (10ம் தேதி) ராணா பிரதாப் என்பவர் பொறுப்பேற்றார் .முன்னதாக இவர் விநாயகரை தரிசனம் செய்தவருக்கு கோயில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து  கோயில் நிர்வாக அலுவலகத்தில் பொறுப்பேற்ற ராணா பிரதாப் கோயில் ஊழியர்களுடன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  முதலில் கோயில் ஊழியர்களை அறிமுகம் செய்துக் கொண்டதோடு அவர்களுக்கு  தங்களை முழு அர்ப்பர்ணிப்போடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார் .இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா மற்றும் அதிகாரிகள் ,கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !