சிங்கனுார் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :1151 days ago
திண்டிவனம்: சிங்கனுார் லட்சுமி நாராயண சீனிவாச பெருமாள் கோவிலில், திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.