அரசஅடி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1151 days ago
காஞ்சிபுரம் ; சின்ன காஞ்சிபுரம் சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் அரசஅடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவையொட்டி நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, விநாயகர், துர்கா, லட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்து, குடும்ப நலம், உலக நன்மை வேண்டி பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற, 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.