திருப்பரங்குன்றம் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை: டிவிக்களில் பக்தி நிகழ்ச்சிகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அர்ச்சனையில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்காக பக்தி நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களின் நிகழ்வுகள் டிவி மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவரும் பக்தர்கள் திருவாட்சி மண்டபங்களில் சிறிது நேரம் அமர்ந்து செல்வது வழக்கம். திருவாட்சி மண்டபத்திலுள்ள உற்சவர்கள் முத்துக்குமாரசுவாமி, தெய்வானை முன்பு பக்தர்களின் திருமணங்கள் நடக்கிறது. தாலிகட்டும் நிகழ்ச்சி முடிந்து மற்ற சம்பிரதாயங்களை திருமண வீட்டார் திருவாட்சி மண்டபத்தில் நடத்துகின்றனர். திருமணத்திற்கு வருபவர்களும் சிறிது நேரம் மண்டபத்தில் அமர்ந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் இரண்டு பெரிய டிவி க்கள் அமைக்கப்பட்டு பக்தி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.