பொற்றையடி சாயிபாபா ஆனந்த கோயிலில் 15ம் தேதி சிறப்பு வழிபாடு
ADDED :1150 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி மெயின்ரோட்டில் பொற்றையடியில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இவ்வாலயத்தில் வரும் 15ம் தேதி சிறப்பு வழிபாடு
நடைபெறுகிறது. அதன்படி காலை 10 மணிக்கு ஆனந்த சாய் பஜன்ஸ்பாபாவின் கானமழை, 11.30 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, தொடர்ந்து தியானம் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு தெ ய்வீக ஒளி தரிசனம் 3 நிமிடங்கள் மட்டும் நடை பெறும். 12.15 மணிக்கு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாயிசேரிட்ட பிள் டிரஸ்ட், ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.