எல்லாம் உங்கள் வசமாகும்
ADDED :1103 days ago
கோபம் என்பது ஒரு கொடிய மிருகம். அதை யார் வளர்க்கிறாரோ அவரை அழித்துவிடும். ஒரு வகையில் கோபமும் புயல் போன்றதுதான். அது அடங்கிய பிறகே யாருக்கு என்னென்ன நஷ்டம் என்பது புரியவரும். இன்றைய காலத்தில் பலரும் ‘எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று தெரியாது’ என்று சொல்வர். இது மிகவும் தவறான குணம். யாரிடம் கோபம் உள்ளதோ அவர் முன்னேறுவது கஷ்டம். எல்லாம் உங்கள் வசமாக கோபத்தை தவிருங்கள்.