உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

சோழவந்தான்: மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா அக்.,4ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அக்.,11 காலை பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அன்றிரவு கரும்புத் தொட்டில் சுமந்தும், அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !