பத்ரகாளி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா
ADDED :1095 days ago
திருமங்கலம்: திருமங்கலம் சந்தைப்பேட்டை எட்டுப்பட்டறை ஸ்ரீ பத்ரகாளி முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா செப். 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சாமி புறப்பாடு, வாகனங்களில் வீதி உலா, திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை, போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் திருவிழாவின் 12ஆம் நாளான நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க., நகரச் செயலாளர் விஜயன் செய்திருந்தார்.