திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :1095 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விழா நடந்தது. காலையில் மூலவர் கற்பக விநாயகர் மற்றும் கோயிலில் உள்ள அனைத்து விநாயகர்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்கத்தா காளியம்மன் கோயில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விழாக்கள் நடந்தது.