உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மகோற்சவம்

வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மகோற்சவம்

குன்னூர்: குன்னூர் பெரிய வண்டிச்சோலை சின்ன திருப்பதி கோவில் எனும் வெங்கடாசல கோவிலில், நேற்று புரட்டாசி மகோற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச பூஜை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, மகாதீபாராதனை, சுற்று விளக்கு ஏற்றுதல், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மதியும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள், பக்தர்கள் செய்திருந்தனர். குன்னூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !