ரோப்கார் சேவை இன்றும் நிறுத்தம்: பழைய பெட்டிகளை பொருத்தி சோதனை
பழநி: பழநி மலைக்கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை இரண்டாவது நாளாக இன்றும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.
பழநி முருகன் மலைக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் சென்று வர முடியும். (அக்.,14) அன்று ரோப்கார் பாறையில் உரசியது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. என நேற்று (அக்.,16) ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அதில் தற்போது பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளை அகற்றிவிட்டு பழைய ரோப் கார் பெட்டிகளை பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். இதில் கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் பொறியாளர்கள் பழைய பெட்டிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்றும் (அக்.17.,) ஜோக்கர் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.