உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் பாபா மந்திர் அறக்கட்டளை சார்பில் சத சண்டி ஹோமம்

சாய் பாபா மந்திர் அறக்கட்டளை சார்பில் சத சண்டி ஹோமம்

அவிநாசி: சாய் பாபா மந்திர் அறக்கட்டளை சார்பில் சத சண்டி ஹோம விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலில் திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ சத சண்டி ஹோம விழா நடைபெற்று வருகிறது. ஆனைமலை ரூஹர்ஷ் விதயாபீடம் பூஜ்யஸ்ரீ ததோவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். முன்னதாக, சனிக்கிழமை அன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்டவைகளுடன் தொடங்கிய மகா சத சண்டி ஹோமமானது நேற்று முன் தினம் சண்டி பாராயணம், ஹோமம்,வேள்வி உள்ளிட்டவைகளுடன் இரண்டாம் காலம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று காலை தொடங்கிய சண்டி பாராயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அதனையடுத்து சண்டி வேள்வி மாலையில் பைரவர் மற்றும் யோகி பலிதானம் நடத்தப்பட்டது. ஸ்ரீ மகாகாளி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சங்கரி, ஸ்ரீ ஜெய துர்கா, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ ராஜா மாதங்கி, ஸ்ரீ பவானி, ஸ்ரீ அர்த்தாம்பிகா, ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ அக்னி துர்காம்பிகை, ஸ்ரீ வித்யா தாரிகா பரமேஸ்வரி ஸப்த சதிகாளி உள்ளிட்ட 13 வகையான சண்டிகா பரமேஸ்வரி இந்த யாகத்தில் பூஜிக்கப்படுகிறார்கள். மேலும், 96 வகையிலான ஷண்ணவதி ஹோமம் பொருட்கள் இதில் உபயோகப்படுத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று முற்றிலும் விலக வேண்டும், புதிய வியாதிகள் தோன்றாமல் இருக்கவும், உலக மக்கள் நன்மைக்காகவும், பொருளாதார உயர்வு, இயற்கை இடர்பாடுகள் நீங்கிடவும் ஸ்ரீ சத சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. என்றும், இன்று காலையில் சண்டி பாராயணம், வேள்வி, கன்னியா, சுமங்கலி பூஜை உள்ளிட்டவைகளுடன் திரவ்யாகுதி, மஹாபூர்ணாகுதி, கலசபிஷேகம், உள்ளிட்டவைகள் தொடர்ந்து நடைபெறும் .அதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று ஸ்ரீ சாய் பாபா மந்திர் அறக்கட்டளை தலைவர் ரவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !