உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லப்பட்டியில் மண்டல பூஜை

கொல்லப்பட்டியில் மண்டல பூஜை

வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டியில் ஸ்ரீ வெற்றிவிநாயகர். காளியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது மண்டல பூஜை நடந்தது. யாக பூஜைகளை தொடர்ந்து பொங்கல் அழைப்பு ஊர்வலம் நடந்தது. கிராம மக்கள் ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழா ஏற்பாட்டினை கொல்லபட்டி, ஜி.புதுார், எம்.வி.நாயக்கனூர் கிராமங்களின் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !