உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பரவசம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பரவசம்

சூலூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை, திருவீதி உலா நடந்தது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பஜனையுடன் திருவீதி உலா நடப்பது வழக்கம். கடைசி சனிக்கிழமையான நேற்று முன் தினம், சூலூர் வட்டார பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் அடுத்த தேவராயம்பாளையத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் திருமஞ்சன அலங்கார பூஜைகள் அதிகாலையில் நடந்தது. மாலை திருவீதி உலா மற்றும் பஜனை நடந்தது. சூலூர் வேங்கடநாத பெருமாள் கோவில், வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை பூஜை நடந்தது. கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பஜனையுடன் திருவீதி உலா வந்து பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேய சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைத்து கோவில்களிலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !