உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் பேட்டரி கார் சேவை

மயிலம் கோவிலில் பேட்டரி கார் சேவை

மயிலம் : மயிலம் கோவிலில் இலவச பேட்டரி கார் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் கோவில் படி ஏற முடியாமல் அவதியடைகின்றனர். அவர்களது வசதிக்காக இலவச பேட்டரி கார் சேவை நேற்று துவங்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சிவஞானம் பாலய சுவாமி, பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்தார். ஆதீன திருமடத்தைச் சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன், ராஜ்குமார் ராஜேந்திரன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !