வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி தரிசனம் நிறைவு
உடன்குடி: புன்னைநகர், வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட் டு , கடந்தசெப்., 24, அக்., 1, அக்., 8 ஆகிய மூன்று சனிக்கிழமைகளில் காலை5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜை, காலை6:00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், காலை 8:30 மணிக்கு திருவாராதனம், தளிகைமற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. புரட்டாசி 4வது சனிக் கிழமை காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு கோபூஜை, காலை 6:00 மணிக்கு மூலவர், உத்ஸவர் திருமஞ்சனம், காலை8:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் நாச்சியார் அணிவித்த மாலையை, வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அணிவித்தல். காலை 8:30 மணிக்கு திருவாராதனை, தளிகைசாத்து முறை கோஷ்டி, மதியம் 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து சகஸ்ஹர நாம அர்ச்சனை , சாயரட்சை பூஜை, பெருமாள் திரு வீதி உலா கருடசேவை நடந்தது. இதில், சுற்றுப்புறபகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர், நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் குமாரர்கள் ஷிவக்குமார் , சரவணன், கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தனர்.