வரும் 25ம் தேதி ஈச்சனாரி விநாயகர் கோவில் அடைப்பு
ADDED :1086 days ago
கோவை : நடப்பாண்டின், கடைசி சூரிய கிரகணமானது, வரும் 25ம் தேதி, மாலை, 5:21 மணிக்கு துவங்கி, மாலை, 6:23 மணி வரை நடைபெறுகிறது.
சூரிய கிரகண நேரத்தில் கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். இதன்படி, அன்றைய தினம், ஈச்சனாரி, விநாயகர் கோவில் நடை, மாலை 3:00 முதல், இரவு, 7:00 மணி வரை அடைக்கப்படும். இந்த சமயத்தில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரவு, 7:00 மணிக்குப் பின், வழிபாடுகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.