பழநி கோயிலில் 6.40 லட்ச ரூபாய் செலவில் நடமாடும் கழிப்பறை!
ADDED :4809 days ago
பழநி: பழநி கோயிலில் நடமாடும் கழிப்பறை 6.40 லட்ச ரூபாய் செலவில், வாங்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, இலவச நடமாடும் கழிப்பறை ஏற்கனவே இரண்டு வாகனங்கள் உள்ளது. நேற்று மூன்றாவதாக 6 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலவில் "பஸ்சை ரீ மாடலிங் செய்து தயாரிக்கப்பட்ட, புதிய நவீன நடமாடும் கழிப்பறை வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெண்களுக்கு 6அறைகள், ஆண்களுக்கு 7அறைகள் என தனித்தனியாக, தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்காலங்களின் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.