வீரட்டானேஸ்வரர் கோவிலில் கேதார கௌரி நோன்பு வழிபாடு
ADDED :1154 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று கேதார கௌரி நோன்பு எடுத்து வழிபாடு நடத்தினர்.
தீபாவளி நரகாசுரனை பகவான் வதம் செய்த நாளாக கொண்டாடினாலும், அன்றைய தினம் ஐஸ்வரியம் தரும் கேதார கவுரி விரதம் இருந்து பக்தர்கள் கேதார கௌரி நோன்பு எடுப்பது வழக்கம். அந்த வகையில் திருக்கோவிலூரில் தீபாவளி நோன்பு எடுக்கும் வழக்கம் உள்ள பக்தர்கள் நேற்று காலை முதல் விரதமிருந்து விரட்டானேஸ்வரர், உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் கேதார கௌரியை வழிபட்டு நோன்பு எடுத்தனர். அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் இன்று காலை நோன்பு எடுப்பதற்கான வழிபாட்டு நடவடிக்கைகளை நேற்று மாலையை துவக்கினர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.